என் நண்பர் ஒருவர் சமீபத்தில் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார் - உங்களுக்கு தமிழ் bloggers யாரையாவது தெரியுமான்னு... இந்த கேள்வி என்னை சிந்திக்க வைத்தது. நானே ஆங்கிலத்தில் ஒரு blog site எழுதி கொண்டிருந்த நேரத்தில் இப்படி ஒரு தமிழ் சிந்தனையை நண்பரின் கேள்வி தூண்ட, அப்புறம் பார்தால் நம்ப ஆங்கில blogsite-டே தமிழ் transliteration வசதியை கொடுப்பது எனக்கு ஒரு ஆச்சரியமான விஷயமாக பட்டது... சரி நம்ப தமிழ் எழுத்தறிவையும் கொஞ்சம் வளர்த்துக்கலாம்னு இந்தமுதல் blog எழுத உட்கார்ந்தேன். தமிழ்கூறும் நல்லுகை சார்ந்த மக்கள் என் எழுத்தில் தவறு இருந்தால் மன்னிப்பார்கள் என்ற ஒரு அசட்டு நம்பிக்கையோடு.... அது சரி, blog-க்கு தமிழ் சொல் என்னன்னு யாருக்காவது தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்களேன்?
இன்னொரு விஷயம்... நான் பார்த்த வரைக்கும் பொதுவா NRI மக்கள் செந்ததமிழ்-ழிலேயே blog-கோ, கட்டுரையோ எழுத வேண்டும் என்று நினைக்கிறார்-களோ-ன்னு தோணுது. இப்பவே நான் சொல்லிட்டேன், நான் வசன நடையில தான் எழுத போறேன்... ஆனா இன்னிக்கு முதல் நாள் இத spelling தவறில்லாம அடிக்கரதுக்குள்ள நான் பட்ட அவஸ்தை... so குட் நைட் சொல்லி விடை பெர்ர்றேன்... நன்றி மீண்டும் சிந்திப்போம்...